தமிழக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே கட்டமாக 100% பொருட்களை வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் ஆளும் கட்சி மக்களுடைய மனதில் இடம் பிடித்து தலைமையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் களம் சுறுசுறுப்பாக இருப்பதன் காரணமாக நியாய விலை கடைகளில் மக்களுக்கு கொடுக்கப்படும் பொருள்களில் ஊழியர்கள் சுணக்கம் காட்டி விடக்கூடாது, அவர்களுக்கு ஒழுங்காக பொருட்களை வழங்க வேண்டும் என்று அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பபடாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 100 சதவீத பொருட்களையும் ஒரே கட்டமாக வழங்குவதற்கான பணியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து அடுத்த சில நாட்களில் ரேஷன் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வந்தவுடன் மக்களுக்கு ஒரே கட்டமாக பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.