விழுப்புரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணா. இவரது மகள் பாரதி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 11 ஆம் வகுப்புகளுக்கான மாதிரி தேர்வு பள்ளிகளில் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,
தேர்வுக்காக தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பாரதியை கத்தியால் குத்தியும் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தும் தப்பிச் சென்றனர். இதில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சை நடுவே புதுச்சேரி காவல் துறையினர் பாரதியிடம் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது பெண்ணிற்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.