Categories
மாநில செய்திகள்

3வது முறையாக…. நாம் வெற்றி பெற வேண்டும் – அதிமுக வியூகம்…!!

தேர்தல் பிரசாரத்தில் 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் உறுதி எடுத்து கொண்டுள்ளனர்.

2021 வருட சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னேர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு பேசியுள்ளார்.

மேலும் ஒரு வருடகாலம் அதிமுக தமிழகத்தில் ஆட்சி செய்யும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து வைத்திலிங்கம், கே.பி முனுசாமி போன்றோரும் அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான வழிகள் குறித்து பேசியுள்ளனர். இந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்திருந்துள்ளனர். மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

Categories

Tech |