விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% கல்வித்தொகையுடன் இடமும் வழங்கப்படும் என்று வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். இதையடுத்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி வசதி மற்றும் தமிழக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தோடு இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொரு விளையாட்டிலும் சிறந்த மாணவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 100 சதவீத உதவித்தொகையுடன் இடம் கொடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.