சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எம்டிசி பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாதந்தோறும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதத்துக்கு இலவச பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் ஒரு வருடம் கழித்து நாளை முதல் மீண்டும் செயல்படுத்த உள்ளது.
இலவச பஸ் பாஸ் அடையாள அட்டை ஏற்கனவே பெற்றவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மூத்த குடிமக்கள் www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பஸ் பாஸ் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும் என்று எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.