Categories
தேசிய செய்திகள்

முதன்முறையாக…. “2020 உலக தரவரிசை பட்டியலில்” அண்ணா பலக்லைக்கழகம்…!!

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அறிவுசார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் தர வரிசைப் படுத்தி ஒவ்வொரு ஆண்டும் டைம்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டது.

Image result for anna university

அதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. முதல் 10 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் 3 கல்வி நிறுவனங்கள் மட்டுமே மாறி மாறி இடம்பிடித்துள்ளன.

Image result for anna university

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் இந்து ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் 300 முதல் 400 இடங்களுக்கு பின் தள்ளப்பட்டுள்ளன. இதேபோல மும்பை டெல்லி ஐஐடி நிறுவனங்கள் 400 முதல் 500 இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.அது மட்டுமல்லாது இதுவரை பட்டியலில் இடம் பெறாமல் இருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் சென்னை எஸ்ஆர்எம் உள்ளிட்ட 54 கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன.

Categories

Tech |