சிலி நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக 35 வயதான கேப்ரியல் போரிக் இளம் வயது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
சிலி நாட்டில் 35 வயது நிரம்பிய இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். ஆமாங்க, சிலி நாட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக இளம் வயது நபர் ஒருவர் அதிபராகிறார். அந்த பெருமை கேப்ரியல் போரிக்-கு கிடைத்துள்ளது. அதாவது சிலி நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கேப்ரியல் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியை பெற்றுள்ளார்.
இவருக்கு எதிர் போட்டியாக நின்ற ஜோஸ் அன்டோனியோ என்பவர் 44 சதவீத வாக்குகளை பெற்று 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் பல மாதங்களாக சிலி நாட்டில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கேப்ரியலின் இந்த வெற்றி செபாஸ்டியன் பினேரா தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர உள்ளது.