Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் முதன் முறையாக…. “பேப்பர்லெஸ் பட்ஜெட்”…. மாத்தி யோசித்த மோடி…!!

வரலாற்றிலேயே முதன்முறையாக 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் பேப்பர்லெஸ் முறையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

2021 – 2022 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. ஏனெனில் கொரோனா பரவலால் தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்குதலானது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அதாவது சுதந்திர இந்தியாவின் முதல் முறையாக பட்ஜெட் தாக்குதலானது டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் இல்லாத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. ஆதலால் பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இடையே சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த முடிவை மத்திய நிதி அமைச்சகம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரமடைந்து முதன்முதலாக இப்போதுதான் மத்திய பட்ஜெட் பிரிண்ட் செய்யாமல் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில் முதன்முதலாக பேப்பர்லெஸ் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |