Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக…. இந்தியாவில் “குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி” – வெளியான தகவல்…!!

உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஒன்று மட்டுமே தீர்வு என்ற நிலையில் உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட வயதினருக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இரண்டு முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பரிசோதனையை பயோடெக் நிறுவனம் தொடங்க உள்ளது. அதற்கான அனுமதியையும் அந்நிறுவனம் மத்திய அரசிடம் கோரியுள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உலகிலேயே குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை நாங்கள் தான் முதன் முதலாக நடத்துகிறோம் என்று பார்த்த பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |