கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக நாடுகள் மும்மரமாக அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஷ்யாவில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை உலகிலேயே முதல்முறையாக மனிதன் மீது செலுத்தி அந்நாடு சாதனை படைத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் மாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி தெரிவித்ததாவது, கொரோனாவுக்கு ரஷ்யா கண்டுபிடித்த இந்த மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் இது மனிதர்களுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.