Categories
உலக செய்திகள்

முதல் முறையாக இந்திய அதிகாரிகள்…. தலீபான்களுடன் பேச்சுவார்த்தை….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான்களுடன் இந்திய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் முதல் தடவையாக பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அங்கு கடுமையாக பல கட்டுப்பாடுகளை விதித்தனர். குறிப்பாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், தலீபான்கள் நாட்டை கைப்பற்றியவுடன் அங்கு கடுமையான நிதி நெருக்கடியும் நிலவியது. மக்கள் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளரான ஜே.பி.சிங் தலைமையில் இயங்கும் அமைப்பு, தலீபான்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக காபூல் நகருக்கு சென்றிருக்கிறது. அந்நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்வதற்காக தலிபான்களுடன் இந்திய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |