Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”செயலில் கூடுதல் கவனம் அவசியம்”.. செலவு அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..!!  இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்டத்திட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புக்கள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்து கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. வீண் மனக்கவலை காரிய தாமதம் போன்றவை வந்து செல்லும், கவனமாக இருங்கள். பிள்ளைகளிடம் அன்பு கூடும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று திருமண முயற்சிகள் வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும். காதலர்களுக்கு இனிய நாளாக இன்றைய நாள்அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீல நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |