அதிமுக வெற்றி பெற்றால் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என்று முதல்வர்அறிவித்துள்ளார் .
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது, திமுக குடும்ப அரசியல் கட்சி நடத்தி வருகிறது. நான் ஒரு விவசாயி.
எனவே அவர்களுடைய சிரமத்தை உணர்ந்து விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்தேன். திமுக வெற்றி பெறாது. நான் மீண்டும் முதலமைச்சராகி அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பேன். மேலும் வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.