Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…”எந்த செயலிலும் வெற்றி கிடைக்கும்”.. வாய்ப்புகள் வந்து சேரும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றியை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும்.  பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எடுக்கக்கூடிய முயற்சியில் ரொம்ப சிறப்பான வெற்றி இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

ஆனால் ஒரு சில நேரங்களில் நீங்கள் நிதானத்தை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூக சேவகர்களுக்கு பலன்கள் அதிகமாகவே இருக்கும். நன்மை தீமை இரண்டும் கலந்து இருந்தாலும் எந்த பிரச்சினையும் இல்லை. சிறப்பாக தான் இன்றைய நாள் செல்லும். எந்த ஒரு வேலையும் செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் மட்டும் கொஞ்சம் இருங்கள் அது போதும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப சிறப்பாக இருக்கும். மனம் மகிழ்ந்து கொள்ளக்கூடிய சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |