கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று பணப்பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்பாராத விதத்தில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.
குறைகள் நீங்கும் சட்டதிட்டங்களுக்கும், நீதி, நேர்மை, நியாயத்திற்கும் கட்டுப்பட்டு இன்று நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்களும் ஏற்படும். மன நிம்மதியும் மனோதிடமும் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வாக்கும் செல்வசெழிப்பு ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்