Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…”வாய்ப்புகள் தேடி வரும்”.. பண வருமானம் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு உங்களை தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். விட்டு உபயோக பொருள்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். இன்று உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும், சுபச் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீன் அலைச்சலும் காரிய தாமதமும் கொஞ்சம் இருக்கும்.

புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைக்கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு ஏற்க்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றவரிடம் பேசும் போதும் ரொம்ப கவனமாக பேசுங்கள். முக்கியமாக உயர் அதிகாரியிடம் பேசும் போது ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுங்கள், மனக்குழப்பம் அடையாதீர்கள்.  இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் நிம்மதியாகவே காணப்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்ள்.  நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |