Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”வரங்கள் வாயில் கதவு தட்டும்”…… பணி நிமித்தமாக வெளியூர் பயணம்….!!

கும்ப ராசி அன்பர்களே…!! இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரங்கள் வந்து வாயில் கதவு தட்டும். நல்ல செய்தி ஒன்று தூரதேசத்தில் இருந்து வந்து சேரும். தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது ரொம்ப கவனமாக விளையாட வேண்டும்.

இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை இன்று நிதி மேலாண்மை ஓரளவு சிறப்பை கொடுக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் காவி நிறம்

Categories

Tech |