கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று அடுத்தவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்படுவீர்கள். உங்கள் உழைப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள்.
நன்மைகள் அதிகமாகவே இன்று கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும் எடுத்த காரியம் அனைத்துமே வெற்றிகரமாக முடியும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய வசீகர பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் விளையாட்டை ஏற கட்டிவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷடத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்லபடியாக இருப்பீர்கள்.
உங்களுக்ககான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்