Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…”சீரான பண வரவு கிடைக்கும்”.. நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..!!  இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரிசெய்வீர்கள். சீரான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகமாகும். இன்று குடும்ப நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான நிலை இருக்கும்.

வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றிலும் இன்று லாபம் கிடைக்க கூடிய சூழ்நிலை இருக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள், மீண்டும் வந்து உங்களை நாடிவரக்கூடும்.  நன்மை தீமை பற்றிய கவலையில்லாமல் தலைநிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது மட்டும் நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லை மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |