Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”தொழிலில் புதிய பரிமாணம் ஏற்படும்”.. பண வரவு பூர்த்தியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று காரியங்களில் ரொம்ப சிறப்பாகவே செயல்படுவிர்கள். உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டக்கூடும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் ஏற்படும்.  கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாளாக இருந்து வந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். அரசாங்கம் மூலம் லாபம் இருக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் சாதகமாகத்தான் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக தான் காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மட்டும் கவனமாக செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது  சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |