தமிழ்நாட்டில் தொழில் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க மின்னழுத்தத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறு குறு தொழிற்துறையினரின் துயரை தீர்ப்பதற்காகவும், தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், தாழ்வழுத்த மின்னிணைப்புக்கான மேல்வரம்பு 112 கிலோ வாட்டில் இருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தை தர வேண்டும், உயரழுத்த மின்தேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், வளாகத்தினுள் அமைக்கப்படும் மின்கடத்திகளுக்கான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மற்ற நிபந்தனைகளை http://www.tnerc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் 112 கிலோ வாட் அல்லது அதற்கு குறைவான மின் தேவை உள்ள நிறுவனங்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.