Categories
உலக செய்திகள்

உருமாறிய வைரஸுக்கான…. “7 அறிகுறிகள்” – சுகாதாரத்துறை…!!

உருமாற்றம் அடைந்த கொரோன வைரஸுக்கான 7 அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து இருந்து இன்னும் உலக நாடுகள் மீண்டு வராத நிலையில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை அனைத்து நாடுகளும் தடை செய்தது. உருமாறிய இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை அடுத்து புதிய வகை வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருவதால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.

மேலும் இந்த வைரஸ் பழைய வைரஸை விட வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாற்றம் பெற்ற இந்த புதிய வகை வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஏற்கனவே கொரோனா அறிகுறிகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி மற்றும் தோல் அரிப்பு போன்ற 7 புதிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிகுறிகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |