அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான EMI வள்சொளிக்கப்படாது என்று நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு அறிவிப்புகளும் , சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் அடுத்த 3 மாதங்களுக்கான EMI வலசூலிக்கப்படாது என்ற முக்கியமான அறிவிப்பை தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.
சென்னை தலைமை செயலகத்தில் இந்தியன் வங்கி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பேட்டியளித்த அவர், அடுத்த மூன்று மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி, EMI வசூலிக்கப்டாது. ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.