நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நபர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுத்தி சாலை பகுதியில் நவலடி கணேஷ்(42) என்பவர் அவரது மனைவி சத்யபிரியா மற்றும் மகன் ஆதித்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் இருசக்கர வாகனம் மூலம் பிரிதி எளையாம்பாளையம் பகுதியில் இருக்கும் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து ஒக்காடு பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அங்கு சென்றுகொண்டிருந்த லாரியின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து வந்த திருச்செங்கோடு ரூரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கணேஷ் உடன் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.