Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…”தொழில் சுமாராகவே இருக்கும்”.. பணம் செலவாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!!  இன்று உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். நேரம் தவறி உணவு உண்பதால் உடல் நலம் பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். இன்று மேல் இடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

எதிர்பார்த்த பணி இட மாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்றுக்கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |