விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாளாக இருக்கும். கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்த்தது எளிதில் நிறைவேறும். இன்று தொலைதூர தகவல்கள் மனம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.
திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் போன்றவை ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழல் இருக்கும். தொழிலில் திடீர் போட்டிகள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது மட்டும் நல்லது. கூடுதலாக தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், பாடங்களை தெளிவாக படியுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்