Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாத்தி கம்மிங்” பாடலுக்கு…. இந்திய வீரர்கள் கலக்கல் ஆட்டம்…. வைரல் வீடியோ…!!

இந்திய அணி வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் அஸ்வின் ஆல்-ரவுண்டராக அசத்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதையடுத்து ஏற்கனவே நடந்த இந்த போட்டியில் அஸ்வின் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு லேசாக நடனமாடினார். இதை நெட்டிசன்கள் அதிகமாக பகிர்ந்து வந்தனர். மேலும் விஜய் வாயில் உஷ் என்று கை வைத்திருப்பதைப்போல அஸ்வினை மாற்றி வைத்து இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் அதே பாடலுக்கு இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடன் அஸ்வின் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களால் பகிரப்பட்டு அதிகம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி தற்போது இந்திய அணி வீரர்கள் வரை விஜயின் பாடல் ஹிட் அடித்துளதாள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் இதே பாடலுக்கு நடிகர் வடிவேலுவை வைத்து மீம்ஸ் போட்டு வைரலாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |