Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

VCK சுவரொட்டிக்கு…. மர்மநபர்கள் அவமரியாதை….. கைது செய்ய கோரி….. ஊர்மக்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் த.பழூர்  பகுதியில் நேற்றைய தினம் ஒட்டப்பட்டிருந்த விடுதலைகள் சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை மர்மநபர்கள் நள்ளிரவில் அவமரியாதை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை காலையில் பார்த்த கட்சியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கட்சி ஆட்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை கூடிய விரைவில் கைது செய்யக் கோரி கோஷமிட்டனர். பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Categories

Tech |