ராமநாதபுரம் மாவட்டத்தில் தந்தையில் வேலைக்காக அண்ணன் தம்பி சண்டை போட்டுகொண்டு அரிவாளால் வெட்டியதில் தம்பி படுகாயம் அடைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மடை பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ராஜகுரு மற்றும் வீரமணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதனையடுத்து ஜெகதீசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளது. எனவே இவருடைய வேலையை 2 மகன்களில் யாரேனும் ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் அண்ணன் தம்பி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இவர்களுக்குள் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த ராஜகுரு சொந்த தம்பி என்று கூட பார்க்காமல் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீரமணிகண்டன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து அவர் ராஜகுரு மீது போலீசில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் ராஜகுரு மீது வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.