தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.