இறந்தவர்களின் உடலில் தேசியக் கொடியை போர்த்துவது குறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்விந்தர் சிங் என்பவர் கடந்த ஜனவரி 26ம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவரது மேல் தேசியக் கொடியை போத்தினர். இதனால் உயிரிழந்த பல்விந்தேர் சிங்கின் தாயார் மற்றும் சகோதரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து அகலாபாத் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் நரேன் மாத்தூர் கூறியதாவது, அரசு, ராணுவம்,துணை இராணுவப் படைகளின் இறுதிச் சடங்குகளில் மட்டுமே தேசியக் பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது. அரசு மரியாதையுடன் செய்யும் சடங்குகளுக்கு மட்டுமே தேசியக்கொடி பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் காவல்துறை மற்றும் ஆயுதப் படைகள், ஜனாதிபதி,துணை ஜனாதிபதி, பிரதமர் முதலமைச்சர் உள்ளிட்டோர் மரணமடையும் போது அவர்களது சடங்குகளில் தேசியக் கொடியை பயன்படுத்த அனுமதி உள்ளது.
ஆனால் இவர்களைத் தவிர வேறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீது தேசியக் கொடி போர்த்த முடியும் என்று தெரிவித்தார்.