பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் போன்ற புதியதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், தொற்று அதிகமாகவும் பரவி உள்ளது. எனவே பல நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. இந்தியாவிலும் இன்று நள்ளிரவு 11.59 மணியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், நவம்பர் 25 முதல் பிரிட்டனிலிருந்து இந்தியா வருபவர்களை அதிகாரிகளால் 14 நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்படும்.
பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதி செய்த பிறகு வீட்டிற்கு சென்று 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வெளியிட்டுள்ளது.