Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய கட்சி தொடங்குபவர்களுக்கு…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட…. சூப்பர் நியூஸ்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்க இருபவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போதைய நடைமுறைப்படி தேர்தல் ஆணையத்தில் ஒரு புதியதாக கட்சி தொடங்க விரும்புவர்கள் கட்சி ஆரம்பித்த 30 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் 2 தேசிய நாளிதழ்கள், 2 உள்ளூர் நாளிதழ்கள் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

இதில் ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால் 30 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கட்சியின் பெயர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடக்கும் இந்த ஐந்து மாநிலங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படுவதால் திருத்தங்களை சமர்ப்பிக்க அவகாசம் ஏழு நாட்களாக குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வு தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு புதுச்சேரி கேரளம் ஆகிய மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 19ஆம் தேதி வரையிலும், மேற்குவங்கத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டது.

Categories

Tech |