ஆஸ்துமா பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்கு எந்த உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
குளிர் காலத்தில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பலரும் மூச்சு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்நிலையில் ஆஸ்துமா இருப்பவர்களின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்புகள் உள் காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும். அதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் பகலில் எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்கனி எடுத்துக் கொள்ளலாம். அதில் உள்ள வைட்டமின் சி உள் காயத்தை குணமாக்கும். பிஸ்தா பருப்பு, கீரை ஆகியவற்றில் காணப்படும் விட்டமின் பி6 ஆஸ்துமா தீவிரத்தை குறைக்கும். மக்னீசியம் நுரையீரல் தசைகளை தளர்த்தும்.