தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், இன்று மதியம் மூன்று மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி வரும் 28ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிமுக சார்பில் செய்து தரப்பட்ட தங்க கவசத்தை தற்பொழுது அதிமுக சார்பாக யாரிடம் ஒப்படைப்பது என்பது இன்று முடிவாகும். இதுகுறித்து வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மூன்று மணிக்கு தீர்ப்பை வழங்க இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.