தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில், பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள் அனைத்து வகையான சமூக, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் இவைகளெல்லாம் 31ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கான விமானம், ரயில் பேருந்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது . இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்ற நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தளர்வு இல்லாத மாவட்டம் (12) :
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்.
தளர்வு பெற்ற மாவட்டம் (25) :
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி.
தளர்வு கொடுக்கப்பட்ட 25 மாவட்டத்தில் e-Pass இல்லாமல் பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், கார்களில் மூன்று நபர்களும், சிறிய கார்கள் என்றால் இரண்டு நபர்கள் இது செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.