Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாங்குநேரி யாருக்கு…? ஆதிக்கம் செலுத்தும் அதிமுக…எதிராக 66.34 % வாக்கு….!!

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் நாங்குநேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஓர் சட்டமன்ற தொகுதி ஆகும். இதில் பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி , எர்வாடி,திருக்குறுங்குடி , களக்காடு ,கருவேல குளம், சேரன்மகா தேவி உள்ளிட்ட பகுதிகள் உள்ளடக்கி உள்ளன.

 

2012 H.வசந்தகுமார் இ.தே.கா பெற்ற வாக்கு சதவீதம் 33.66

2011 A.நாராயணன் அ.இ.ச.ம.க பெற்ற வாக்கு சதவீதம் 46.00

2006 H.வசந்தகுமார் இ.தே.கா பெற்ற வாக்கு சதவீதம் 51.76

2001 S.மாணிக்கராஜ் அதிமுக  பெற்ற வாக்கு சதவீதம் 51.54

1996 S.V.கிருஷ்ணன் இந்திய கம்யூனிச கட்சி  பெற்ற வாக்கு சதவீதம் 40.27

1991 V.நடேசன் பால்ராஜ் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 72.90

1989 ஆச்சியூர் M.மணி திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.87

1984 M.ஜான் வின்சென்ட்அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 58.00

1980 M.ஜான் வின்சென்ட்அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 52.18

1977 M.ஜான் வின்சென்ட்ஜனதா கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 27.71

10 முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே 4 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.அடுத்தபடியாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , 1 முறை திமுக , 1 முறை சமத்துவ மக்கள் கட்சி , 1 முறை இந்திய கம்யூனிச கட்சி  மற்றும் ஒருமுறை ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெறும் 33.66 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தார். அவருக்கு எதிராக 66.34 சதவீத வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |