Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டு ஆசை….. கப்பலில் வேலை….. ரூ1,00,000 சம்பளம்….. ஆசை காட்டி மோசம்….. ரூ25,00,000 மோசடி…..!!

திண்டுக்கல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ25,00,000  மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் தனக்கு  சென்னையில் அலுவலகம் உள்ளதாகவும், அதன்மூலம் பல பேருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்துள்ளார்.

இதனை கண்ட இளைஞர்கள் சிலர் அவரிடம் வேலை  வாங்கி தர கோரி அணுகியுள்ளனர். இந்நிலையில் லண்டனில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண், ஜார்ஜ்  சித்தையன்கோட்டை பகுதியை சேர்ந்த அக்துள்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபேஷ் ஆகியோரிடமிருந்து லண்டனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு நபரிடம் தலா 5 லட்சம் என ரூ 25,00,000 பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்நிலையில் ஒரு வருடம் கடந்த நிலையில், தங்களுக்கு வேலையும்  கிடைக்காமல், பணமும் திரும்ப பெறமால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து தங்களது பணத்தை திரும்பத்தரக்கோரி பலமுறை நேரில் சென்று கேட்ட பின்பும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரும் மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் மனு அளித்தனர். அதில்,  உடனடியாக முத்து முகமதுவைக் கைதுசெய்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |