ஆஸ்திரியாவில் புதிய பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் ஆளும் மக்கள் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த செபாஸ்டியன் கர்ஸ் (35) தனக்கு சாதகமான செய்திகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை அரசு பணத்தை செலவிட்டு ஊடகங்களில் வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த சனிக்கிழமை அன்று செபாஸ்டியன் கர்ஸ் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் செபாஸ்டியன் கர்ஸ் கட்சித் தலைவராக எப்போதும் போல் பணியாற்றுவார்.
இந்த நிலையில் புதிய பிரதமராக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணிபுரிந்த அலெக்சாண்டர் ஷாலென்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதவி பிரமாணத்தை அதிபர் அலெக்சாண்டர் வான் டெர் செய்து வைத்துள்ளார். இதற்கிடையே பிரான்சுக்கான தூதராக இருந்த மிக்கேல் லின்ஹர்ட் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.