வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார்.
இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ பி ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தைப் பார்வையிடும் முதலவர் இந்துஜா உள்ளிட்ட தொழிலதிபர்கள் , இங்கிலாந்து எம்.பி.க்களை சந்தித்து பேசுகின்றார். இதை முடித்துக் கொண்ட முதல்வர் வருகின்ற செப்டம்பர் 1_ஆம் தேதி அமெரிக்கா செல்கின்றார்.2_ஆம் தேதி அங்குள்ள பப்ஃபல்லோ நகரில் அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர்களை நேரில் சந்தித்து பேசுகின்றார்.
அங்கிருந்து 3_ஆம் தேதி நியூயார்க் செல்லும் முதல்வர் அங்கு நடைபெறும் தமிழ் முனைவோர் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார். இதையடுத்து 4_ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் அங்கு இருக்கும் ப்ளும் எனர்ஜி நிறுவனத்தைப் பார்வையிடுகின்றார். 5_ஆம் தேதி டெஸ்லா, இ.வி பாக்டரி, உள்ளிட்ட நிறுவனங்களைப் தமிழக முதல்வர் பார்வையிட்டு விட்டு அங்கிருந்து புறப்படும் முதல்வர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் துபாயில் தொழில் முனைவோரை சந்திக்க்கிறார்.
பின்னர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 10_ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார். முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த தமிழக முதல்வரை துணை முதலவர் , தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் முதலீட்டை ஈர்க்கவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.