சுவிட்சர்லாந்திற்குள் திருடிய வாகனத்துடன் புகுந்த வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் காவல் துறையிடம் மாட்டிய நிலையில் அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தில் இருந்து, தொடர்ந்து ஏடிஎம் நிலையங்களில் வெடி வைக்கப்பட்டு தகர்க்கப்பட்ட பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது வெளிநாட்டை சேர்ந்த திருடர்களின் செயலாக இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 51 வயதுடைய ஒரு நபர், காவல் துறையினரின் சோதனையில் சிக்கிருக்கிறார். அந்த நபர் இயக்கி வந்தது திருடப்பட்ட வாகனம் என்று தெரியவந்திருக்கிறது.
அவரின் வாகனத்தை சோதனையிட்ட காவல்துறையினர், அதில் வெடி மருந்துகளும் ஏடிஎம் நிலையங்களை தகர்க்கக்கூடிய கருவிகளும் இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரோமானிய நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் இந்த சம்பவத்தில் கைதானார். அவருக்கு ஆறரை வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.