தஞ்சை பெரிய கோவிலுக்கு ஐரோப்பிய சினிமா உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் வந்து வழிபட்டுச் சென்று அதற்கான சான்றுகளாக சிற்பங்கள் விளங்குகின்றன.
ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலின் வடக்குப் பக்கம் சண்டிகேஸ்வரர் ஆலயம் அருகில் இரண்டாவது சிலையாக ஐரோப்பிய சிலை ஒன்று இருக்கும். அதனை பார்க்கும் போது பிற்காலத்தில் செதுக்கிய சிற்பம் என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அது தவறு. அது ராஜராஜன் காலகட்டத்தில் கடல் கடந்து சென்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி சீனர்களுடனும் பிற நாட்டு மக்களுடனும் தொடர்பு வைத்து அந்த மக்கள் இங்கே வந்ததன் நினைவாக கோபுரத்தில் அவர்களுக்கு ஒரு இடத்தையும் ஒதுக்கி கொடுத்து அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.
இந்த சிற்பத்தை வைத்து பார்க்கையில் பல ஐரோப்பியர்கள் மற்றும் பல வெளிநாட்டவர்களும் கோவிலுக்கு வந்து வழிபட்டு உள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.