நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடு கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் சுற்றுலாத்துறை மந்திரி காண்ஸ்டன்டின் ராஸ்வோசோவ் ரஷ்ய நாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்க ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நஃதலி உலக சுகாதார அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்படாத ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ள சுற்றுலா பயணிகளையும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் அவசியம் பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சோதனை முடிவுகள் வர 48 மணி நேரம் ஆகலாம். எனவே வெளிநாட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் அவசியம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.