நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள விளாங்காடு பகுதியில் வறட்சியின் காரணமாக மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களிலுள்ள தானியங்களை சாப்பிட்டுவந்தன.. இந்தநிலையில் இன்று விளாங்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மற்றும் ஞானசேகரன் ஆகியோரின் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துகிடந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர், மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும், இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.