கோவை சாடி வயல் யானைகள் முகாமில் இருந்து தப்பி ஓடிய கும்கி யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநிலத்தில் ஆலந்துறை, ஓடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டிராம்டிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் வனப்பகுதிக்கு சுயம்பு, வெங்கடேஷ் என்கின்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரபட்டன.
இந்நிலையில் வெங்கடேஷ் என்கிற கும்கி யானை இன்று காலை முகாமில் இருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் வனத்துறையினர் யானையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக யானையை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாகன்கள் மற்றும் ஊழியர்களிடமும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.