கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையில் புகுந்த 60 காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தற்போது 60 காட்டுயானைகள் கர்நாடகாவில் இருந்து வந்திருப்பதால் அந்த யானைகள் அனைத்தும் வேறு பகுதிக்கு செல்லாத வகையில் வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த யானைகள் அனைத்தும் இரவு நேரங்களில் தேன்கனிக்கோட்டை, ஊடேத்துர்க்கம் வழியாக வந்து சானமாவு வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் சானமாவு வனப்பகுதியை சுற்றிலும் தென்பெண்ணை ஆற்று நீரைக்கொண்டு நடவு செய்துள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நாசமாகி விடும் என்பதற்காக 20-க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர் ஜவளகிரி வனப்பகுதியில் 60 காட்டுயானைகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து, யானைகளை அவ்வழியில் செல்லாத வகையில் திசைதிருப்பி வருகின்றனர்.