சிலியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சில தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியை சக வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சிலி நாட்டில் இருக்கும் நுபில் என்னும் பகுதியின் குய்லோன் நகரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் ஒரு ட்ரக்கில் சென்று, தீயணைப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அதி வேகமாக பரவிய காட்டுத் தீயில் அவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
எனவே, சக வீரர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டில் சமீப நாட்களாகவே காட்டுத்தீ தீவிரமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை சேதமாகியிருப்பதாக சிலியின் வேளாண் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.