Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. வீடுகளை இழந்த மக்கள்…. புதிய முறையில் எடுக்கப்பட்ட வீடியோ….!!

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் ரெடிங் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பானது தீயில் கருகி நாசமாகியுள்ளது.

மேலும் இந்த காட்டு தீயினால் அப்பகுதியில் உள்ள 4500 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த காட்டுதீயினால் ஏற்பட்ட கரும்புகையானது விண்ணில் பல கிலோமீட்டர் தூரம் வரை பரவி இருக்கிறது. அதனை டைம் லேப்ஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவாக எடுத்துள்ளனர்.

Categories

Tech |