வன பகுதியில் வாழும் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வனதுறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னங்காடு, பெரியூர், பால் சிலம்பு உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் இருந்து வருகின்றன. இந்த கிராமபுறங்களில் கொரோனா பரவலை தடுக்க வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதித்துள்ளனர். இதைப்போல் இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருந்து வாங்குதல், மருத்துவ சிகிச்சை, விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதற்காக மட்டுமே அப்பகுதியை விட்டு வெளியை வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களை கண்காணிக்கும் பொருட்டு வத்தல் மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடியில் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வெளியாட்கள் உள்ளே செல்கின்றார்களா என வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதில் பகல் நேரத்தில் பெண் வனதுறையினர் மற்றும் இரவு நேரத்தில் ஆண் வனதுறையினர் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.