Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடும்பை துண்டு துண்டாக வெட்டி விற்க முயன்ற நபர் கைது..!!

உடும்பு கறி விற்பனை செய்ய முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள திருமல்வாடி, ரங்கம்பட்டி, காப்புக்காடு, பகுதியில் உடும்புகளை மர்மநபர்கள் வேட்டையாடுவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவன் 2 1/2 கிலோ எடையுள்ள உடும்பை பிடித்து அதை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்ய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.. அதைத்தொடர்ந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வட்டகாணப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலன் என தெரியவந்தது.. வனத்துறையினர் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |